ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் உயிருக்கு ஆபத்துஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின் விடுதலையாகியுள்ள சாந்தனின் உடல்நிலை குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.


தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.


சாந்தனின் கல்லீரலில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதிகள் உரிமை மையம்  தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று தற்போது விடுதலையான சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக விசா பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார். 


சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கால் வீங்கியுள்ளன. கல்லீரலும் பாதிக்கப்பட்டுள்ளது  எனினும் இரண்டு மாதங்களாக உரிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை. இதனால் அவர் உயிருக்கு போராடுகின்றார் என்பதால்  அவரை காப்பாற்றவேண்டும் என சிறைக்கைதிகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments

Youtube Channel Image
TamilPlus Subscribe To watch more Videos
Subscribe